×

பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்.. முகாம் மீதான தாக்குதலுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம்..!!

வாஷிங்டன் : பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலுக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் மூண்டது. போர் நடந்த 3 வாரங்களில் 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் முறையாக நேற்று முன்தினம் ரபா எல்லை திறக்கப்பட்டு வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் இருந்த 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல் தரைவழிப்படைகள் நேற்று காசாவை நோக்கி மேலும் முன்னேறின.

இந்நிலையில், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலுக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜவாலிய முகாமில் நடந்த தாக்குதலை குறிப்பிட்டு 20 ஆண்டுகளாக திறந்தவெளி சிறைபோல இருந்த காசா தற்போது சசுடுகாடாகி வருவதாக அவர் தம் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல நாட்டு அரசுகளின் ஆதரவுடன் நடந்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்.. முகாம் மீதான தாக்குதலுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Angelina Jolie ,Israel ,Washington ,Hollywood ,Gaza ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...